கல்லூரி விடுதியில் எம்பிஏ மாணவர் தூக்கிட்டு தற்கொலை: திருப்பரங்குன்றத்தில் அதிர்ச்சி

By என்.சன்னாசி

மதுரை: மதுரை திருப்பரங்குன்றத்தில் எம்பிஏ மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் குலமங்கலம் அருகிலுள்ள கீழபனங்காடி சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் செந்தூர் ராம் ( 21 ) திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் அருகிலுள்ள தனியார் மேலாண்மை கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்தார். விடுதியில் தங்கி படித்த செந்தூர் ராம், நேற்று முன்தினம் இரவு ஆண்கள் தங்கும் விடுதியில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதை அறிந்த சக மாணவர்கள் அவரை மீட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிந்ததாக கூறினர். திருப்பரங்குன்றம் போலீசார் செந்தூர் ராம் உடலை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கை பெற சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 - 24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கும் தொடர்புகொண்டு பேசலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE