நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள முயன்ற முஸ்லிம் இளைஞர்: இந்து அமைப்பினர் தாக்குதல்! 

By KU BUREAU

கான்பூர்: ஸ்வரூப் நகரில் நடந்த நவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயன்ற முஸ்லிம் இளைஞரை விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

ஸ்வரூப் நகரில் உள்ள லஜ்பத் பவனில் நேற்று நடந்த நவராத்திரி நிகழ்ச்சியில் தனியார் காவலர்கள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பை சேர்ந்த தன்னார்வ ஊழியர்கள் பார்வையாளர்களின் அடையாளங்களைச் சரிபார்த்தனர். அவர்கள் ​​இந்துக்கள் அல்லாதவர்கள் யாரும் அந்த இடத்திற்குள் நுழைவதைத் தடுத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முயன்ற முஸ்லிம் இளைஞரை விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் அடையாளம் தெரியாத இளைஞரை தாக்கியதற்காக, அடையாளம் தெரியாத நபர்கள் மீது மோதிஜீல் போலீஸ் அவுட்போஸ்ட் இன்சார்ஜ் ரவிக்குமார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார் என்று துணை போலீஸ் கமிஷனர் தினேஷ் திர்பதி தெரிவித்தார். தாக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

கான்பூர் வடக்கு பகுதியின் விஹெச்பி மாவட்டச் செயலாளர் யுவராஜ் திவேதி, நகரில் நடந்து வரும் நவராத்திரி விழாவில் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்பதைத் தடுக்க, 'கர்பா' மற்றும் 'டாண்டியா' இடங்களில் சோதனை நடத்தியதாக கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE