சவுக்கு சங்கர் வழக்கு... பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்!

By கே.காமராஜ்

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி வி.எல்.சந்தோஷ் உத்தரவிட்டார்.

ரெட் பிக்ஸ் என்ற பெயரில் டிஜிட்டல் ஊடக நிறுவனம் நடத்தி வரும் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். அதில் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அது எவ்வித தணிக்கையும் இன்றி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

கோவை நீதிமன்றத்தில் பெலிக்ஸ் ஜெரால்ட்

இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சவுக்கு சங்கர் தற்போது திருச்சி லால்குடி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி சிறையில் இருந்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் பெண் காவலர்கள் பாதுகாப்புடன் இன்று கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5ல் நீதிபதி வி.எல் சந்தோஷ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

கோவை நீதிமன்ற வளாகம்

இதையடுத்து நீதிபதி வி.எல்.சந்தோஷ், பெலிக்ஸ் ஜெரால்டை மே 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து பெண் காவலர்கள் பாதுகாப்புடன் பெலிக்ஸ் ஜெரால்ட் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...


தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

என் கணவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினை உள்ளது... முதல்வர் தனிப்பிரிவில் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு!

மீண்டும் சர்ச்சையில் டிடிஎப் வாசன்... கார் ஓட்டி அட்ராசிட்டி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு... மேலும் குறையுமா?!

சென்னையில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட 27 டன் வெடிபொருட்கள்... துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அரசு அனுமதி மறுப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE