டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ள பண்டிட் பண்ட் மார்க் பகுதியில் அமைந்துள்ளது. நாடு முழுமைக்குமான பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய அறிவிப்புகள் இந்த அலுவலகத்தில் இருந்து வெளியிடப்படும். தற்போது தேர்தல் காலம் என்பதால் இங்கு ஏராளமான பாஜக தொண்டர்கள் தினந்தோறும் வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென இந்த அலுவலகத்தில் உள்ள ஒரு பகுதியில் புகை வருவதை கண்ட தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்த போது தீ விபத்து ஏற்பட்டு புகை வருவதை அவர்கள் தெரிந்து கொண்டனர். இது தொடர்பாக உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய சூழலில் இந்த தீ விபத்து காரணமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்த பிறகே, சேதம் குறித்தான தகவல்கள் தெரிய வரும் என போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
‘இளையராஜா’ படத்திற்கு இசையமைப்பாளரே கிடையாதா?! ரசிகர்கள் ஷாக்!
கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்... பதறும் ரசிகர்கள்!
வீடியோ காலில் மனைவியை பயமுறுத்த தூக்குமாட்டிய ஜிம் பயிற்சியாளர்... கயிறு இறுகி உயிரிழந்த பரிதாபம்!
'அவங்களைக் கொலை செய்கிற எண்ணமே இல்லை'... ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!