வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து... 21 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததால் பரபரப்பு!

By காமதேனு

டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்க 21 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

டெல்லியில் உள்ள மாநில காவல்துறை தலைமை அலுவலகம் தற்போது வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் பழைய கட்டிடத்தில் சில துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணிபுரிந்து வருகின்றனர். இதன் எதிரிலேயே வருமானவரித்துறை அலுவலகம் அமைந்துள்ளது.

இன்று வழக்கமான பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், மதியம் 3 மணியளவில் திடீரென இந்த கட்டிடத்தின் 4வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.

4வது தளம் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்ததால், அங்கிருந்த ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். சில பெண் ஊழியர்கள் மட்டும் வெளியேற முடியாததால், 4வது தளத்தில் உள்ள ஜன்னலை திறந்து அங்குள்ள சன்ஷேட் பகுதியில் பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் 21 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து உயிர் பயத்தில் இருந்த பெண் ஊழியர்களை ஏணிகள் மூலம் ஏறி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

பெண் ஊழியர்களை தீயணைப்புத்துறையினர் ஏணிகள் வைத்து மீட்டனர்

இருப்பினும் வேறு ஏதேனும் பகுதியில் தீ காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக சோதனை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்ற போதும், முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் பரபரப்பு நிலவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE