திருப்பூர் சிறுமிகள் கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் ஒருவன், கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் பெற்றோர் இறந்து விட்டதால் தனது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக சிறுமியின் உடல் நிலையில் பிரச்சினைகள் ஏற்பட்டதால், அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த போது, அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததால் மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவரிடம் குழந்தை நல ஆர்வலர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தனது வீட்டின் அருகில் உள்ள சிலர் தன்னை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது வீட்டின் அருகே வசித்து வரும் 13 வயது சிறுமி ஒருவருக்கும் அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உடுமலையைச் சேர்ந்த ஜெயகாளீஸ்வரன் (19), மதன்குமார் (19), பரணிகுமார் (21), பிரகாஷ் (24), நந்தகோபால் (19), பவா பாரதி (22) ஆகிய 6 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் 14, 15, 16 வயது கொண்ட 3 சிறுவர்களையும் கைது செய்து கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், கோவை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் ஒருவன் திடீரென நேற்று இரவு கை கழுகுவதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு ஆயிலைக் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் உடனடியாக சிறுவனை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது சிறுவனின் உடல்நிலை தேறி விட்டதாக கூறப்படும் நிலையில், இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
முடிதிருத்தும் கடையில் திடீரென நுழைந்த ராகுல் காந்தி; திக்குமுக்காடிப் போன ஊழியர்!
மும்பை பேனர் விழுந்த விபத்து.... பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு... இழப்பீடு அறிவிப்பு!
டெல்லியில் இருந்து சைக்கிளில் பயணம்... சேப்பாக்கத்தில் வெளியே கூடாரம்... தோனி ரசிகரின் வெறித்தனம்!
பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.80 லட்சம் பறிமுதல்!