பகீர்... டெல்லியில் 100 இடங்களில் குண்டுவெடிப்பு நடத்த சதி: ஐ.எஸ் தம்பதிக்கு 20 ஆண்டுகள் வரை சிறை!

By காமதேனு

டெல்லியில் 100 குண்டு வெடிப்புகள் நடத்த சதித்திட்டம் தீட்டிய ஐ.எஸ் தம்பதியருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இருந்து ஜஹான்ஜெப் சமி மற்றும் ஹினா பஷீர் பெய்க் என்ற ஜோடி கடந்த 2019-ம் ஆண்டு டெல்லிக்கு குடிபெயர்ந்தனர். 370 வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் அக்டோபர் 6-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

பிடெக் மற்றும் எம்பிஏ படித்த ஜஹான்ஜெப் சமி இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி பெய்க் எம்பிஏ படித்துள்ளார். அத்துடன் கணினி பயன்பாடுகளில் இளங்கலை பயின்ற அவர் சில வங்கிகளில் பணியாற்றி வந்தார்.

இவர்கள் இருவரும் டெல்லியில் உள்ள ஜாமியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவ ந்தார். அவர்கள் இருவரும் வாரத்தின் இறுதிநாட்களில் திரைப்படம் பார்ப்பதற்கோ அல்லது ஓக்லாவில் உள்ள பறவைகள் சரணாலயத்திற்கோ சென்று வந்தனர். இந்த நேரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்ததால், இந்த தம்பதியர் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் இருவரும் இணையத்திலேயே நேரங்களை செலவழித்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2020 மார்ச் 8-ம் தேதி ஜஹான்செப் சமி மற்றும் ஹினா பஷீர் பெய்க் வீட்டிற்கு டெல்லி காவல் துறையினர் பயங்கவாத எதிர்ப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக நுழைந்தனர். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இவர்கள் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

ஹன்னாபீ, கதிஜா அல் காஷ்மீரி (பைக்), மற்றும் சைப், அபு அப்துல்லா, அபு முஹம்மது-அல்-ஹிந்த் (சாமி) என பல்வேறு பெயர்களில் அறியப்படும் இந்த தம்பதிகள் ஐ.எஸ் உறுப்பினர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டனர். பல மாதங்களாக அவர்கள் கண்காணிப்பில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. அதில், கலிபாவை நிறுவ முயன்றதாகவும், டெல்லியில் 100 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்த சதித்திட்டம் தீட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமிக்கு மூன்று முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும்,பெய்க்கிற்கு இரண்டு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE