ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

By காமதேனு

கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து வந்த பயணியிடம் இருந்து 90.28 லட்சம் ரூபாய் மதிப்புள்ளான தங்க கட்டிகள் மற்றும் தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு தினந்தோறும் இருபதுக்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு இயக்கப்படும் ஸ்கூட் என்ற தனியார் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த 7ம் தேதி சிங்கப்பூரிலிருந்து கோவை விமான நிலையத்துக்கு வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை விமான நிலையம்

அப்போது ஒரு பயணியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று உடைமைகளை பரிசோதனை செய்தனர். அப்போது அவரது பையில் தங்கக் கட்டிகள் மற்றும் தங்க செயின்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை விமான நிலையம்

அந்த நபரின் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. அவரிடமிருந்து ஒரு கிலோ 220 கிராம் எடை கொண்ட 10 தங்கக் கட்டிகள் மற்றும் செயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 90 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE