பயங்கரம்... ஆவடியில் கழுத்தை அறுத்து சித்த மருத்துவர், அவரது மனைவி கொடூரக் கொலை!

By காமதேனு

ஆவடி அருகே சித்த மருத்துவரும், அவரது மனைவியையும் நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த முத்தா புதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரைச் சேர்ந்தவர் சிவன் நாயர் (62) சித்த மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக் நடத்தி வந்தார். இவரது மனைவி பிரசன்னகுமாரி (58). இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. இவர்களது ஒரே மகன் வெளிநாட்டில் கல்வி பயின்று வருகிறார்.

ஆவடி

இந்த நிலையில், வயதான அவரது தாய், தந்தை மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு சித்த மருத்துவர் சிவன் நாயர், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகிய இருவரும் கழுத்து அறுபட்ட நிலையில் வீட்டில் பிணமாகக் கிடந்துள்ளனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவர்கள், உடனடியாக முத்தாப்புதுப்பேட்டை போலீஸார் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸார், விரைந்து வந்து பார்த்த போது சிவன் நாயரும், அவரது மனைவி பிரசன்னகுமாரியும் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதையடுத்து அவர்களது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வந்தனர். தனியாக வசித்து வந்த கணவன், மனைவியை குறிவைத்து கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிவன் நாயர் வீட்டில் இருந்து 800 கிராம் நகை திருடப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

குற்றவாளி கைது

அப்போது சிவன் நாயர் வீட்டில் ஒரு செல்போன் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திய போது இந்த இரட்டைக் கொலையை செய்தது ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரைச் சேர்ந்த மகேஷ்(29) என்பது தெரிய வந்தது.

இவர் சென்னையில் உள்ள ஹார்டுவர் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். சிவன் நாயர் வீட்டில் இருந்து 800 கிராம் நகை திருடப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த இரட்டைக் கொலை நகைக்காக நடந்ததா அல்லது வேறு பிரச்சினைக்காக நடந்ததா எனபோலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளி கைது

இக்கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது சிவன் நாயர் வீட்டில் ஒரு செல்போன் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்திய போது இந்த இரட்டைக் கொலையை செய்தது ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரைச் சேர்ந்த மகேஷ்(29) என்பது தெரிய வந்தது. இவர் சென்னையில் உள்ள ஹார்டுவர் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்த இரட்டைக் கொலை நகைக்காக நடந்ததா அல்லது வேறு பிரச்சினைக்காக நடந்ததா எனபோலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE