நடிகர் விஜய் மீது செருப்பு வீசிய சம்பவம்: போலீஸில் பரபரப்பு புகார்!

By காமதேனு

நடிகர் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்த சென்ற நடிகர் விஜய் மீது செருப்பு வீசிய விவகாரம் தொடர்பாக விஜய் மக்கள் இயக்கத் தலைவர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

விஜயகாந்த் உடல்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார். இதையடுத்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர் விஜயகாந்தின் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவருக்குச் சொந்தமான திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டது.

அப்போது அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் சென்று விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அன்று இரவு சுமார் 10 .30 மணியளவில் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் விஜய் சென்றார்.

அப்போது கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நடிகர் விஜய் மீது செருப்பை வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புகார்

இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தென்சென்னை மாவட்டத் தலைவர் அப்பனு கோயம்பேடு காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அதில்," கடந்த 28-ம் தேதி நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார்.

கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு நடிகர் விஜய் அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காலணியை கழற்றி நடிகர் விஜய் மீது வீசிய சம்பவம் ஒட்டு மொத்த ரசிகர்கள் மற்றும் அவரது சொந்தங்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உள்ளது.‌

எனவே அருவருக்கதக்க வகையில் இது போன்ற செயலில் ஈடுபட்ட நபரை கண்டுபிடித்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைது?! போலீஸார் குவிந்ததால் பதற்றம்!

அயோத்தி ராமர் கோயிலை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்: மின்னஞ்சலில் மிரட்டல் விடுத்த 2 பேர் கைது!

உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை!

திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் அம்மாவான நடிகை!

பிகினியில் கலக்கும் ‘வேட்டையன்’ பட நடிகை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE