இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

By காமதேனு

சொத்துப் பிரச்சினைக்காக தந்தையை, அவரது ஒரே மகன் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தந்தையை தாக்கிய மகனை பெரம்பலூர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தில் வேல்முருகன் மார்டன் ரைஸ் மில் நடத்தி வந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி ஹேமா இவர்களுக்கு சக்திவேல் என்ற மகனும் சங்கவி என்ற மகளும் உள்ளனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஒரு வீட்டில் குழந்தைவேலும், ஹேமாவும் தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், சொத்தை பிரித்து தரும்படி மகன் சக்திவேல், தொடர்ந்து தந்தை குழந்தைவேலுவிடம் கேட்டு வந்துள்ளார். இதற்கு மறுத்து வந்ததால், வீட்டில் அடிக்கடி தகராறு செய்வதும், பொருட்களை உடைப்பதுமாக இருந்துள்ளார் சக்திவேல். இதுகுறித்து காவல்நிலையத்தில் சக்திவேல் மீது குழந்தைவேல் புகார் அளித்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கிருஷ்ணாபுரத்தில் உள்ள குழந்தைவேலின் வீட்டுக்குள் ஆவேசமாக நுழைந்த சக்திவேல் சொத்து பிரிவினை குறித்து பேசியுள்ளார். வழக்கம்போல குழந்தைவேல் மறுக்கவே, தந்தை என்றும் பாராமல் அவரது முகத்தில் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார் சக்திவேல். அதை தடுக்கக்கூட முடியாத குழந்தைவேல், தொடர்ந்து அடிவாங்கிக் கொண்டே இருந்துள்ளார். மகனும் மீண்டும் மீண்டும் வந்து அவரைத் தாக்கி உள்ளார்.

இதைப் பார்த்துவிட்டு ஓடி வந்த பக்கத்துவீட்டு நபர் ஒருவர் சக்திவேலை தடுத்து அழைத்துச் சென்றுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுவதுமாக பதிவாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் மூக்கு எழும்பு உடைபட்ட குழந்தைவேல், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார்.

தந்தையை தாக்கிய மகனை தடுத்து அழைத்துச் சென்ற நபர்

குழந்தைவேல் இறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோவை, குழந்தைவேலுக்கு வேண்டப்பட்டவர்கள் தற்போது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ வெளியானதை அடுத்து போலீஸார் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்து இன்று அவரை சேலத்தில் கைது செய்தனர். குழந்தைவேல் மரணத்திற்கும், சக்திவேலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. குடும்பப் பிரச்சினை சுமுகமாக பேசி முடித்த பிறகு தொழில் போட்டி காரணமாக பழிவாங்கும் நோக்கத்தில் இந்த வீடியோவை சிலர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளதாக சக்திவேல் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

என்ற போதும் சொத்துக்காக சொந்த மகனே தந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ இப்போது கடும் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

இந்தியாவை விட்டு வெளியேறுவோம்... டெல்லி நீதிமன்றத்தில் வாட்ஸ் - அப் அதிரடி கருத்து

கர்நாடகாவில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு... பிரகாஷ் ராஜ், ராகுல் டிராவிட் ஆகியோர் வாக்குகளை செலுத்தினர்

கேரளாவில் விறுவிறு வாக்குப்பதிவு... ராகுல், சுரேஷ்கோபி, சசி தரூர், தேறுவார்களா?

13 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது... ஆர்வமுடன் திரண்ட வாக்காளர்கள்!

பாலிவுட் போனதும் ஆளே மாறியாச்சு... கீர்த்தி சுரேஷின் செம ஹாட் புகைப்படங்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE