கேரளாவில் ஒன்றரை வயது சிறுவனை அடித்து உதைத்து கையை உடைத்து காயப்படுத்திய சிறுவனின் தாய் மற்றும் அவரது காதலன் ஆகியோர் தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த பிஜு என்பவருக்கும் தீபா என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளார். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதையடுத்து தீபா, அவரது ஆண் நண்பரான கிருஷ்ணகுமார் என்பவரோடு வசித்து வந்துள்ளார்.
சிறுவனை வாரம் ஒரு முறை இருவரும் மாற்றி மாற்றி பராமரித்து வருவது என முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பிஜுவின் வீட்டிற்கு தீபாவும், கிருஷ்ணகுமாரும் வந்தனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாத போதும் சிறுவனை விட்டு விட்டு அவசரமாக கிளம்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த பிஜு மற்றும் அவரது தாயார், சிறுவனைப் பார்த்தனர். அப்போது, சிறுவனின் கை உடைந்திருந்ததோடு, சிறுவனின் உடல் முழுவதும் குச்சியால் அடித்ததால் ஏற்பட்ட தழும்புகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக தீபாவை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்த பிஜு சிறுவனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தலைமறைவான தீபா மற்றும் கிருஷ்ணகுமாரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெற்ற மகனை தாயே அடித்து உதைத்து கை உடையுமளவிற்கு காயப்படுத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
2024-ல் தேர்தலைச் சந்திக்கும் 40 நாடுகள்... இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியம்?
புத்தாண்டு பரிசு... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட்!
ஆபாசமாக உடை அணிந்த மனைவி; கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்: திருமணமான 6 மாதத்தில் பயங்கரம்!
அதிர்ச்சி... மாணவியைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம்: வீடியோ எடுத்து ரசித்த பாஜக நிர்வாகிகள் கைது!