எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநில இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் வடமாநிலங்களுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் சென்று வருகின்றன. மேலும் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் சுத்தம் செய்ய வந்த துப்புரவு பணியாளர் ஒருவர் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில பெண் ஒருவர் அமர்ந்தவாறு தூக்கிட்டு நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவர் உடனடியாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் . இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே இருப்புபாதை போலீஸார், அமர்ந்த நிலையில் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை மீட்டு ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து தற்கொலை செய்து கொண்ட பெண் யார் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.