6 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு... தலைமையாசிரியருக்கு 47 ஆண்டுகள் சிறை; 69 ஆயிரம் அபராதம்!

By காமதேனு

அரசுப் பள்ளி மாணவிகள் 6 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து சிவகங்கை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு இங்கு தலைமை ஆசிரியராக இருந்தவர் முருகன் (54). இவர் பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் காளையார் கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போக்சோ

அப்போது, பள்ளியில் பயின்ற 6 மாணவிகளுக்கு முருகன் பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதையடுத்து முருகனை போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்தது.

சிவகங்கை போக்சோ நீதிமன்றம்

இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தலைமை ஆசிரியர் முருகனை குற்றவாளி என அறிவித்த நீதிபதி சரண்ராஜ், முருகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் 47 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், முருகனுக்கு 69 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு சார்பில் ரூ.29 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார் நீதிபதி.

இதையும் வாசிக்கலாமே...


மதுரை சித்திரைத் திருவிழா... மீனாட்சி தேரோட்டம் - அழகர் புறப்பாடு - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

வாக்குப்பதிவு விவரங்களை செல்போனில் அறிந்து கொள்ளலாம்... புதிய செயலியை அறிமுகம் செய்தது தேர்தல் ஆணையம்!

பகீர்... ஓடும் கார் கதவில் தொங்கியபடி சாகசம்! உயிரை பணயம் வைத்து இன்ஸ்டா வீடியோ!

முஸ்லிம்களை தொடர்புபடுத்தி சர்ச்சை கருத்து... பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க கபில் சிபல் வலியுறுத்தல்!

காங்கிரஸ் செய்த பாவங்களுக்காக நாடு தண்டிக்கிறது... பிரதமர் மோடி சாபம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE