சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. தற்போது சென்னை முழுவதும் பரவலாக கனமழை பெய்ததை அடுத்து அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் மழைக்காக ஒதுங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஒரு பெண் உட்பட பொதுமக்கள் 6 பேர் மேற்கூரையின் அடியில் சிக்கிக் கொண்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவரை பத்திரமாக மீட்டதுடன் இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சைதாப்பேட்டையில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் இடர்பாடுகளில் சிக்கிக்கொண்ட 4 பேரை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த ஆறு பேருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, கந்தசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து சைதாப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயமடைந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கிய பொதுமக்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் ஸ்டாலினிடம் நேரிடையாகவே ரூ.1000 உரிமைத் தொகை கேட்ட பெண்கள்!
சென்னையில் பரபரப்பு... அடுத்தடுத்து மயங்கி விழுந்த 17 ஆசிரியர்கள்!
அதிர்ச்சி... முதல்வரின் வீடு மீது தாக்குதல் முயற்சி; துப்பாக்கிச் சூடு!
இளைய மகளுடன் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி!
இன்று கடைசி தேதி... மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.1,77,500 வரை சம்பளம்; உடனே அப்ளை பண்ணுங்க!