செல்போனை தருமாறு வற்புறுத்திய கணவனால் சீற்றமடைந்த மனைவி கத்திரிக்கோலால் கணவனின் கண்ணில் குத்தியிருக்கிறார். இந்த விவகாரம் காவல்துறை வழக்காக பதிவாகி இருக்கிறது.
உத்திரபிரதேசம் பாக்பத் பகுதியை சேர்ந்தவர்கள் அங்கித் - பிரியங்கா தம்பதியர். இளம் தம்பதியரான இருவர் மத்தியில் நேற்று ஏற்பட்ட சாதாரண சண்டை விபரீதத்தில் முடிந்திருக்கிறது.
செல்போன் என்பது மனிதர்களின் அன்றாடங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. கூடவே தவிர்த்தாக வேண்டிய செயல்பாடுகளுக்கான பொருளாகவும் செல்போன் மாறியிருக்கிறது.
இதனால் ஒருவரது செல்போனை ஆராய்வதில் சமூக ஊடகங்கள் முதல் உற்றார் உறவினர் வரை மெனக்கிடவும் செய்கிறார்கள். செல்போனில் பயனரின் சகல நகர்வுகளையும் கண்காணித்து அவருக்கான விளம்பரங்களை காட்டுவற்காக, சமூக ஊடகங்கள் ஒருவரது அனுமதியின்றி அவரது செல்போன் செயல்பாடுகளை துழாவி வருகின்றன.
அவை தவிர்த்து அடுத்தவர் மீது உரிமை கோருவோரும், கண்காணிப்பது கடமை என்று கருதுவோரும் அவரது செல்போனை ஆராய முற்படுகிறார்கள். இது பிரச்சினைக்கும் வழி செய்யக்கூடியது.
அங்கித் - பிரியங்கா விவகாரத்தில் அதுதான் நடந்திருக்கிறது. யூடியூபில் பாடல் கேட்க வேண்டும் என்று பிரியங்காவின் செல்போனை அங்கித் கேட்டிருக்கிறார். தன்னுடைய செல்போனை ஆராய்வதற்காகவே அவ்வாறு கணவர் கேட்பதை அறிந்துகொண்ட பிரியங்கா செல்போனை தர மறுத்திருக்கிறார்.
’உன்னுடைய செல்போனிலேயே பாட்டு கேட்கவேண்டியதுதானே’ என்றும் பிரியங்கா வாதிட்டிருக்கிறார். இந்த விவகாரம் பெரிய சண்டையாக வலுத்திருக்கிறது. வார்த்தைகள் எல்லை மீறியதில், ஒரு கட்டத்தில் சீற்றமடைந்த பிரியங்கா, கத்திரிக்கோலால் அங்கித் கண்ணில் குத்தியிருக்கிறார்.
வீட்டில் உடன் இருந்தவர்கள் மருத்துவமனையில் அங்கித்தை சேர்த்ததுடன், பிரியங்காவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பொது இடத்தில் அனுமதி மறுப்பு... தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாளை மாலை இறுதி சடங்குகள்!
பி.எஃப் முன்பணம் இனி எடுக்க முடியாது... ஊழியர்கள் அதிர்ச்சி!
50,000 பேர் திரள்கிறார்கள்... சென்னை கோட்டையை முற்றுகையிட்டு போராட்டம்!
அதிகரிக்கும் கொரோனா எண்ணிக்கை:வழிகாட்டு நெறிமுறையை அறிவித்த எய்ம்ஸ்!
அட போங்கையா நீங்களும் உங்க காசு பணமும்... வைரலாகும் விஜயகாந்த் வீடியோக்கள்!