சென்னையில் ஆழ்வார்பேட்டை, கொளத்தூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கொளத்தூர் சிவபார்வதி நகரில் உள்ள தொழிலதிபர் முத்துவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதை போல ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள ஷேர் மார்க்கெட் பங்குதாரர் கணேஷ் என்பவர் வீட்டிலும் பெசன்ட்நகர் மொரிசியஸ் தூதரகத்தில் பணியாற்றுபவரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.