அதிர்ச்சி... காவல் அதிகாரிகளின் உத்தரவால் எஸ்.ஐ தற்கொலை!

By காமதேனு

பணிக்கு வரும்போது இனி மதுபானம் அருந்தக்கூடாது என்ற அதிகாரிகளின் உத்தரவால், காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மதுபானத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்தவர் காவல் உதவி ஆய்வாளர் பசுபதி (55) இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி உயரதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளன.

இதையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் பசுபதியை கண்டித்துள்ளனர். மேலும் பணி நேரத்தில் மதுபானம் குடிக்கக்கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

விஷம்

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்த பசுபதி, அதிகாரிகளின் இந்த உத்தரவால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் மதுபானத்துடன் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து நேற்று தற்கொலை செய்துள்ளார். இவரது உடல் பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE