ஒடிசாவில் தனது தகாத உறவைக் கண்டித்த கணவரை எரித்துக் கொலை செய்ததாக ஆண் நண்பருடன் இளம்பெண் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், சவுத்வாரில் உள்ள மைதானத்தில் டிச.1-ம் தேதி எரிந்த நிலையில், ஒருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த போலீஸார், தீயில் எரிந்த நபரை மீட்டு கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த நபர், மறுநாள் உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்டவர் யார் என சௌத்வார் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது கோபிந்தாபூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட திமிரி கிராமத்தைச் சேர்ந்த நிஷாலா மொஹபத்ரா என அடையாளம் காணப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்த போது, நிஷாலா மனைவி சுஹாசினிக்கு இந்த கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. பூர்ணசந்திரா மோஹரனா(39) என்ற வாலிபருடன் திருமணத்தை மீறிய உறவில் சுஹாசினி இருந்துள்ளார்.
இதை நிஷாலா கண்டித்துள்ளார். ஆனால், அதை மீறி சுஹாசினி, பூர்ணசந்திராவுடன் தகாத உறவைத் தொடர்ந்துள்ளார். இதனால் நிஷாலாவை கொலை செய்ய இருவரும் முடிவு செய்தனர். இதையடுத்து பூர்ணசந்திரா தனது வீட்டிற்கு நிஷாலாவை அழைத்துள்ளார். அங்கு நிஷாலாவிற்கு அதிக மதுவை பூர்ணசந்திரா ஊத்திக் கொடுத்துள்ளார்.
இதனால் போதையில் நிஷாலா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்ததுடன் சவுத்வாரில் உள்ள மைதானத்தில் வீசிச் சென்றது விசாரணையில் தெரிய வந்தது. தாங்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த கொலையைச் செய்தோம் என்று சுஹாசினியும், பூர்ணசந்திராவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை போலீஸார் இன்று கைது செய்தனர்.
இந்த கொலை குறித்து கட்டாக் டிசிபி பினாக் மிஸ்ரா கூறுகையில், “விசாரணையில் கொலைக்கான சில சூழ்நிலை ஆதாரங்கள் போலீஸாருக்கு கிடைத்தன. தடயவியல் குழு சில தடயங்களை வழங்கியது. இது முன்கூட்டியே திட்டமிட்ட கொலை. இந்த குற்றத்தின் மூளையாக செயல்பட்டவர் பூர்ணசந்திர மோஹரனா. நிஷாலாவின் மனைவி சுஹாசினியும் இதில் ஈடுபட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது" என்றார்.
தனது தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை ஆண் நண்பருடன் சேர்ந்து எரித்துக்கொன்ற இளம்பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும் 49 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்! நாடாளுமன்றத்திலிருந்து இதுவரை 141 பேர் வெளியேற்றம்
விவாகரத்து ஆனதும் மகனைத் தத்துக் கொடுத்த சின்னத்திரை நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!
கலக்கல் வீடியோ... விஜய் பாடலுக்கு மகளுடன் குத்தாட்டம் போட்ட தேவதர்ஷினி!
திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா... சிறப்பு ஏற்பாடுகள் தயார்!
ஷாக்... தேநீர் கொண்டு வர தாமதம்: மனைவியின் தலையைத் துண்டித்து கொலை செய்த கொடூர கணவர்!