திமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்து விபத்து... வாகனத்தில் சென்றவர் காயம்!

By காமதேனு

அருப்புக்கோட்டை அருகே அமைச்சர்களை வரவேற்க வைக்கப்பட்டிருந்த திமுக கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததில், அந்த பகுதியில் வாகானத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி படுகாயமடைந்தார்.

சாலையில் கட்சி கொடி மற்றும் பேனர்கள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அகரத்துப்பட்டியை சேர்ந்த திமுக நிர்வாகியின் இல்லத் திருமணம் விழா இன்று நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் வருகை தந்தனர். இதனையடுத்து, திமுக அமைச்சர்களை வரவேற்க அருப்புக்கோட்டையின் பல்வேறு பகுதிகளில் திமுக கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சாத்தூரை அடுத்த செவல்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகவேல், காந்திநகர் பகுதியில் உள்ள திருச்சுழி சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

சாலையில் கட்சி கொடி மற்றும் பேனர்கள்

அப்போது, சாலையோரம் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் ஒன்று அவர் மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுதொடர்பாக, நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், அனுமதி இல்லாமல் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கொடிக்கம்பம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம்... மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது!

இன்று சென்னை உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முன்னறிவிப்பின்றி விமானம் ரத்து...12 மணி நேரம் பரிதவித்த பயணிகள்!

உஷார்... கேரளத்தில் வேகமெடுக்கும் கொரோனா... சபரிமலையில் பக்தர்களிடையே பரவும் அபாயம்!

கிறிஸ்துமஸ் நெருங்கிடுச்சு... பிரபல நடிகையின் கலக்கல் கொண்டாட்டம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE