கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் 42 வயது பெண் ஒருவர் தனது மாமியாரைக் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளம் மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் உள்ள தேவலக்கரையைச் சேர்ந்தவர் தாமஸ் மனைவி மஞ்சுமோள். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தாமஸ் தனது 80 வயதான தாயார் எலியம்மா வர்கீஸை தன்னுடன் வைத்து கவனித்து வருகிறார்.
இந்த நிலையில் மாமியாரை, மருமகள் மஞ்சுமோள் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம், தனது மகள் உட்கார இருக்கையை விட்டுக் கொடுக்கவில்லை என்பதால் இருக்கையில் உட்கார்ந்து இருந்த மாமியாரை மிகவும் கொடூரமாக கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனை தாமஸின் உறவினர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வைரலான நிலையில், மஞ்சுமோள் வீட்டிற்குச் சென்ற போலீஸார், விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாமியாரை தாக்கிய குற்றத்திற்காக மஞ்சுமோளை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம்... மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது!
இன்று சென்னை உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
முன்னறிவிப்பின்றி விமானம் ரத்து...12 மணி நேரம் பரிதவித்த பயணிகள்!
உஷார்... கேரளத்தில் வேகமெடுக்கும் கொரோனா... சபரிமலையில் பக்தர்களிடையே பரவும் அபாயம்!
கிறிஸ்துமஸ் நெருங்கிடுச்சு... பிரபல நடிகையின் கலக்கல் கொண்டாட்டம்!