செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து, போலீஸார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கீதா(38). இவருக்கும் இவரது உறவினர்களுக்கும் சொத்துப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. மார்ச் மாதம் 30-ம் தேதி கீதாவின் குடும்பத்திற்கும், அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் தருண் என்பவருக்கும் இடையே சொத்து விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் தருண், கீதாவையும் கீதாவின் குழந்தைகளையும் சரமாரியாக தாக்கியதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கீதா மற்றும் அவரது குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதனர். அப்போது செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த கீதாவின் தம்பி கார்த்திக், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவர் அங்கு வந்திருப்பதை தெரிந்து கொண்ட தருண், கடந்த 31-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து அவசர சிகிச்சை பிரிவின் உள்ளே புகுந்து கார்த்திகை தாக்கியுள்ளார். பதிலுக்கு கார்த்திக், அவரது உறவினர்கள் இளவரசன், சிகாமணி ஆகியோர் தருணை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இரு தரப்பும் அவசர சிகிச்சை பிரிவில் மாறி மாறி கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டதால், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அச்சத்தில் தலை தெறிக்க ஓடினர். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்திக் (34), இளவரசன் (34), சிகாமணி (35) ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதேபோல் கீதா மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கிய வழக்கில், தருண் என்பவரையும் இன்று கைது செய்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!
கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!
வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!
தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!