அதிர்ச்சி வீடியோ! பேருந்தை முந்த முயன்ற இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

By காமதேனு

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் பிற்பகல், பத்தேரியில் இருந்து புல்லுப்பள்ளி செல்லும் சாலையில், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கிறார் அந்த இளைஞர். தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை, பல முறை முந்த முயற்சிக்கும் இளைஞர், ஒரு கட்டத்தில் பேருந்தை முந்துவதற்காக வேகத்தை குறைக்காமல் சாலையின் வலது புறம் தனது வாகனத்தைத் திருப்ப, எதிரே வந்து கொண்டிருந்த கார் மோதி, இளைஞர் தூக்கி எறியப்பட்ட சம்பவம் கேரளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள பத்தேரி - புல்லுப்பள்ளி சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றை, பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் முந்த முயன்றுள்ளார். இளைஞர் அந்தப் பேருந்தை முந்த முயலும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்து கொண்டிருந்த கார் ஒன்று இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் அந்த இளைஞர் சாலையில் தூக்கி வீசப்பட்டார்.

தலைகவசம் அணிந்திருந்ததால், நல்ல வேளையாக அந்த இளைஞரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையெனினும் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்த மக்கள் இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பத்தேரி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், விபத்துக்குள்ளான இளைஞர் கண்ணூர் மாவட்டத்தை சார்ந்த சுபின் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் பேருந்தின் பின்னால் இருந்த கேமராவில், பதிவாகியிருந்த விபத்தின் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதையும் வாசிக்கலாமே...

பிரபல நகைச்சுவை நடிகர் கடத்திக் கொலை!

கடும் பனிப்பொழிவு... சிக்கித் தவித்த 800 சுற்றுலாப் பயணிகள் மீட்பு!

அதிர்ச்சி...புழல் சிறையில் இருந்து பெண் கைதி எஸ்கேப்: 2 வார்டன்கள் சஸ்பெண்ட்!

'அவளுடன் விஷம் குடித்து விட்டேன் அம்மா';போனில் கதறிய மகன்: காதலர்கள் பலியான சோகம்!

தனி அறையில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: ஆசிரியர் சஸ்பெண்ட்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE