புதுச்சேரி: புதுச்சேரி சாலை விரிவாக்க பணிக்காக குடியிருப்புகள் அகற்றப்பட உள்ளன. இதனால் தங்களுக்கு மனை பட்டா கோரிபள்ளம் தோண்டி ஜீவசமாதி போராட்டம் நடத்தினர். போலீஸார் தடுத்ததால் பெண் ஒருவர் குளத்தில் குதித்தார்.
அரியாங்குப்பம் அருகே ராதாகிருஷ் ணன் நகர் வீராம்பட்டினம் சாலையில் செட்டிகுளம் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 18-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சாலையோரத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றன. இவர்கள், சாலையோரத்தில் உள்ள வீடுகளுக்கு அதன் பின்புறமாக உள்ள இடத்தில் மனைப்பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்ப்பு கூட்டத்திலும் மனைப்பட்டா வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களது ஆதார் அட்டை,வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகளை அவர்களிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து முதல்வர் மற்றும்அமைச்சர்களையும் சந்தித்து புகார் தெரிவித்தனர். ஆனாலும் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை என கூறப்ப டுகிறது.
இந்த நிலையில் அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் சாலை விரிவாக்கம் செய்வதற்காக, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாக செட்டிகுளம் கிராமத்தில் சாலையோரம் வசித்து வரும் மக்களுக்கும் ஆக்கிர மிப்புகளை அகற்ற நோட்டீஸ் வழங் கப்பட்டுள்ளது.
» காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி: தெலங்கானா அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
» நடுவானில் இளம்பெண் மரணம்: சீனா பறந்த விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்!
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்றுகிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் 5 அடி உயரத்துக்கு பள்ளம் தோண்டி னர். பெண்கள், ஆண்கள் என 10 பேர் பள்ளத்தில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடு வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கை தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் ஜீவசமாதியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த அரியாங்குப்பம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடன்பாடு ஏற்படாததால் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
இதனால் போலீஸாருக்கும், போராட் டத்தில் ஈடுபட்டோருக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது பெண் ஒருவர் குளத்தில் குதித்தார். அவரை அங்கிருந்தோர் மீட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் வேனில் ஏற்றிச் சென்றனர்.