ஷாக்... அண்ணனை கட்டையால் அடித்து கொலை செய்த தம்பி: போதையில் வெறிச்செயல்!

By காமதேனு

குடிபோதையில் அண்ணனை கட்டையால் அடித்து தம்பி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடுப்பி

கர்நாடகா மாநிலம்,உடுப்பியில் உள்ள ஹெப்ரி தாலுகாவின் நல்கூர் கிராமத்தின் பாலஸ்ஜேடு பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சுநாதா(35). அவரது தம்பி தம்மா விஸ்வநாத்(30). இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், மஞ்சுநாதாவிற்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அண்ணன், தம்பி ஒரே வீட்டில் வசித்து வந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் அடிதடி வரை சண்டை செல்லும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மஞ்சுநாதாவின் மனைவி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சில நாட்களுக்கு முன்பு சென்று விட்டனர். ஒவ்வொரு நள்ளிரவும் அண்ணனும், தம்பியும் இணைந்து மது அருந்துவது வழக்கம். நேற்று நள்ளிரவும் மஞ்சுநாதா, விஸ்வநாத் ஆகியோர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது போதையில், எனது மனைவி வீட்டை விட்டு போனதற்கு நீ தான் காரணம் என்று தனது தம்பி விஸ்வநாத்தை மஞ்சுநாதா குற்றம் சாட்டினார்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து மஞ்சுநாதா தலையில் சரமாரியாக விஸ்வநாத் தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மஞ்சுநாதா மயங்கி விழுந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஹெப்ரி காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து பார்த்த போது, மஞ்சுநாதா உயிரிழந்து கிடந்தார்.

இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்மா விஸ்வநாத்தை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணனை தம்பி அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE