தடை செய்யப்பட்ட ’பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பினர் கைது... அமலாக்கத்துறை அதிரடி

By காமதேனு

தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 3 நபர்களை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

அப்துல் காதர் புத்தூர், அன்ஷாத் பத்ருதீன் மற்றும் ஃபிரோஸ்.கே என 3 நபர்களை, பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. கைதான மூவரும் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

கைது

அப்துல் காதர் புத்தூர், அன்ஷாத் பத்ருதீன் மற்றும் ஃபிரோஸ்.கே ஆகிய மூவரும் அடிப்படையில் உடற்பயிற்சியாளர்கள். இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஏராளமான உறுப்பினர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் ஆயுத பயிற்சிகளை வழங்கியுள்ளனர். இதற்காக தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வெளியிடங்களிலிருந்து வரவழைத்துள்ளனர்.

அவ்வாறு பயிற்சி அளிப்பதற்காக, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைமையகத்திடம் இருந்து கணிசமான நிதியை இந்த மூவரும் பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. உடற்பயிற்சி, ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை அளித்ததன் நோக்கம், அதற்காக வெளியிடங்களில் இருந்து முறைகேடாக வசூலிக்கப்பட்ட தொகை ஆகியவைகள் குறித்தும் அமலாக்கத்துறை விசாரிக்க உள்ளது.

அமலாக்கத்துறை

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக முன்வைக்கப்பட்ட புகார்கள் காரணமாக செப்டம்பர் 2022-ல் ஊபா- சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் விதிகளின் கீழ் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடைசெய்து உத்தரவிட்டது. கேரளாவில் 2006-ம் ஆண்டு பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உருவானது. இந்த அமைப்பின் தலைமையகம் டெல்லியில் இருந்தது.

இதையும் வாசிக்கலாமே...

அண்ணாமலை முன்னிலையில் பாஜகவினர் மோதல்... கடலூரில் பரபரப்பு!

கமல் படத்திற்காக பிணத்திற்கு மேக்கப் போட்ட டேனியல் பாலாஜி!

பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக் கொலை... வெளியானது அதிர்ச்சி வீடியோ!

ஆடுஜீவிதம் - சினிமா விமர்சனம்

மின்கம்பத்தில் மோதி சிதறிய இருசக்கர வாகனம்... கபடி வீரர்கள் இருவர் உயிரிழப்பு, ஒருவர் படுகாயம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE