மெட்ரோ ரயில் தடத்தில் பரபரப்பு... தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவி!

By காமதேனு

டெல்லியில் மெட்ரோ ரயில் தடத்தில் தற்கொலை முயற்சி மற்றும் மிரட்டலில் ஈடுபட்ட கல்லூரி மாணவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய டெல்லியின் ஷாதிபூர் மெட்ரோ நிலையத்தில் நேற்றும் மாலை இந்த சம்பவம் அரங்கேறியது. மெட்ரோவில் வந்திறங்கிய கல்லூரி மாணவி ஒருவர், ஷாதிபூர் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் தண்டவாளத்தின் திசையில் திடீரென நடைபோட்டார். இதனை மெட்ரோ பாலத்தின் கீழிருந்து கண்ணுற்ற பொதுமக்கள் பதற்றமடைந்தனர்.

அவர்கள் கூச்சலிட்டு அப்பெண்ணை திரும்பிச் செல்லுமாறு எச்சரித்தனர். வேறு சிலர் மெட்ரோ பணியாளர்கள் தகவல் அளித்தனர். பொதுமக்களின் கூக்குரலுக்கு மசியாத அந்தப் பெண், அடுத்த பகீர் நடவடிக்கையாக மெட்ரோ மேம்பாலத்தின் பக்கவாட்டுத் தடுப்பில் கால் வைத்து ஏற முயன்றார். அங்கிருந்து சாலையில் குதிப்பதற்கு அவர் பிரயத்தனப்படவே, கீழிருந்த பொதுமக்கள் மேலும் கூச்சலிட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து தனி பிரச்சினையானது.

பொதுமக்களின் எச்சரிக்கை, கூக்குரல் என எதனையும் காதில் போட்டுக்கொள்ளாத அப்பெண், எவருடனோ அலைபேசியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். மறுமுனை நபருடனான மனஸ்தாபத்தில், கல்லூரி மாணவி தற்கொலை மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றியது பின்னர் தெரிய வந்தது. இதற்கிடையே அங்கு விரைந்த மெட்ரோ பணியாளர்கள் கல்லூரி மாணவியிடம் நைச்சியமாக பேச்சுக் கொடுத்து,அவரை தற்கொலை முயற்சியிலிருந்து பின்வாங்கச் செய்தனர்.

மெட்ரோ ரயில் நிலையம்

அதன் பின்னர் அந்த கல்லூரி மாணவி மெட்ரோ ரயில் நிலைத்துக்கு அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் மூலமாக தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்பதற்கான கவுன்சிலிங் அவருக்கு வழங்கப்பட்டது. அதனையடுத்து, மாணவியின் பெற்றோரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். சாதாரண குடும்ப விவகாரம் தொடர்பாக, கல்லூரி மாணவி தனது பெற்றோருடன் பிணக்கில் இருந்ததும், அதனையொட்டி அவர் தற்கொலை முயற்சி மற்றும் மிரட்டலில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!

ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் பரபரப்பு...விசாரணைக்குச் சென்றவர் வெட்டிக்கொலை!

அதிரடி... விதிகளை மீறியதாக 350 மருத்துவக் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

அதிகாலையில் பெரும் சோகம்... ஏரி உடைந்து ஊருக்குள் பாய்ந்த தண்ணீர்... அலறியடித்து ஓடிய மக்கள்!

2023-ம் ஆண்டில் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது... இவைதான்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE