கரூர்: கரூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேரை வெள்ளியணை போலீஸார கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 6 பேரை போலீஸார் புதன்கிழமை (செப். 25-ம் தேதி) கைது செய்தனர். மேலும் கரூர் மாவட்டத்திலும் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் பாஸ்போர்ட் உள்ளிட்ட சட்டப்பூர்வமான ஆவணங்கள் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
» கடன் பிரச்சனையால் தாய், தந்தை, மகன் தற்கொலை - பெரம்பலூர் அருகே சோகம்
» மண்டபத்தில் தாய், மகள் எரித்துக் கொலை - இலங்கை அகதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தகவலின்பேரில் கரூர் மாவட்ட போலீஸார் இன்று (செப். 25-ம் தேதி) விசாரணை நடத்தினர். விசாரணையில் கரூர் மாவட்டம் மூக்கணாங்குறிச்சியை அடுத்த தம்மாநாயக்கன்பட்டியில் உள்ள லட்சுமி காட்டன் மில்லில் வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் திங்கட்கிழமை வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த சிமில் உசேன் (24), அஜ்மீர்மமூன் (22), ஜமீருல் (30), சகுர் என்கிற சைமீர் (27), ஆசிக்ஹசன் (22) ஆகிய 5 பேரை வெள்ளியணை போலீஸார் புதன்கிழமை (செப். 25-ம் தேதி) கைது செய்து அவர்களிடமும், மில் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.