திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

By காமதேனு

உத்தரப் பிரதேசத்தின் பிரபல தாதாவும், முன்னாள் எம்எல்ஏ-வுமான முக்தார் அன்சாரி, விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து கண்டறிய மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்தார் அன்சாரி

உத்தரப் பிரதேச மாநிலம், மவு தொகுதி எம்எல்ஏ-வாக 5 முறை இருந்தவரும், பிரபல தாதாவுமானவர் முக்தார் அன்சாரி (63). இவர் மீது 60 குற்ற வழக்குகள் உள்ளன. அம்மாநிலத்தில் பண்டாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த முக்தார் அன்சாரி, கடந்த வியாழக்கிழமை இரவு 8.25 மணியளவில் சுயநினைவின்றி கிடந்ததால், சிறை நிர்வாகத்தினர் அவரை அங்குள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு 9 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தும், மாரடைப்பு காரணமாக முக்தார் அன்சாரி உயிரிழந்தார்.

இந்நிலையில் முக்தார் அன்சாரியின் மகன் உமர் அன்சாரி, தனது தந்தைக்கு, சிறையில் 'ஸ்லோ பாய்ஷன்' கொடுத்து கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

காஜிப்பூரில் உள்ள முக்தார் அன்சாரி வீட்டு முன்பு குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

முக்தார் அன்சாரியின் மரணம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழுவினால் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், பாராபங்கி நீதிமன்றத்தில் முக்தார் அன்சாரி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், கடந்த 19ம் தேதி தனக்கு வழங்கப்பட்ட உணவில் நச்சுப் பொருள் கலக்கப்பட்டதாகவும், உணவை உட்கொண்ட பிறகு தனது நரம்புகள் மற்றும் கைகால்கள் வலிக்கத் தொடங்கியதாகவும் அன்சாரி தெரிவித்திருந்தார்.

அன்சாரியின் பிரேதப் பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் தேவைப்பட்டால் அவரது உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே முகமதாபாத் மயானத்தில் அன்சாரியின் இறுதி சடங்கை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பண்டா மருத்துவமனைக்கு வந்த முக்தார் அன்சாரி மகன் உமர் அன்சாரி (இடது)

இதற்கிடையே உத்தரப்பிரதேசம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பெரிய கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பண்டா, மவு, காசிப்பூர் மற்றும் வாரணாசி மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அன்சாரி சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற குடும்பத்தில் பிறந்தவர். அவரது தாத்தா 1927-ல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பணியாற்றியவர். அன்சாரி ஆரம்பத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் செயல்பட்டு வந்தார். அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், குவாமி ஏக்தா தளம் கட்சியை துவங்கி செயல்பட்டு வந்தார். இவரது மரணம் உத்தரப் பிரதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE