அதிர்ச்சி... விஷம் கொடுத்து 2 மகள்களைக் கொன்று விட்டு ரயிலில் பாய்ந்து தந்தை தற்கொலை!

By சிவசங்கரி

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தனது இரண்டு மகள்களை கொன்றுவிட்டு தந்தை ரயில் முன்பு பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், கோழிக்கோடு பய்யோலி பகுதியைச் சேர்ந்த சுமேஷ் என்பவருக்கு 15 வயதில் கோபிகா என்ற மகளும், 12 வயதில் ஜோதிகா என்ற மகளும் இருந்தனர். இவரது தாயார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மனைவி இறந்த பின்பு தனது குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாமல் சுமேஷ் தவித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், சுமேஷின் உடல் அவரது வீட்டருகே இருந்த ரயில்வே தண்டவாளத்தில் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதும் விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் யார் என்பது குறித்து விசாரித்த போது, அந்த நபர், பய்யோலி பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பது தெரியவந்தது.

இதன் பின் அவரது வீட்டுக்கு போலீஸார் வந்து பார்த்த போது, வீட்டில் அவரது இரண்டு மகள்களின் சடலங்கள் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இரு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின், முதற்கட்ட விசாரணையில் தனது இருமகள்களுக்கும் இன்று காலை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பின்னர் சுமேஷும் ரயில் முன்பு பாய்ந்து, தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. எனினும் தன் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, சுமேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் தெரியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE