ஹோலி கொண்டாடியதை தவறாக சித்தரித்து வீடியோ... அவமானத்தில் மாணவி தற்கொலை; 4 பெண்களால் பறிபோன உயிர்

By காமதேனு

உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகை அன்று இளைஞர் ஒருவர் மாணவியின் வீட்டிற்கு வந்து சென்ற வீடியோவை வைத்து, சமூக வலைத்தளங்களில் 4 பெண்கள் அவதூறு பரப்பியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகள் ஒன்று ஹோலி பண்டிகை. கடந்த திங்கட்கிழமை வட இந்தியர்கள் இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். 17 வயதான அவர், சமீபத்தில் பொதுத்தேர்வுகளை எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அப்போது இளைஞர் ஒருவர் அவரது வீட்டிற்கு மதிய நேரத்தில் வந்துள்ளார்.

சமூக வலைதளங்களில்

அவருக்கு குடிப்பதற்கு அந்த மாணவி தண்ணீர் கொடுத்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த இளைஞர் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். இளைஞர் வந்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் வீடியோவை எதிர் வீட்டில் இருந்த 4 பெண்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த வீடியோவை அவதூறான கருத்துக்களை தலைப்பிட்டு அவர்கள் பகிர்ந்து உள்ளனர். இதனால் அந்த பெண் குறித்து மிக மோசமான பின்னூட்டங்களை பலரும் பதிவு செய்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த அந்த மாணவி கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

மாணவி தற்கொலை

இந்த நிலையில் நேற்று அந்த மாணவி திடீரென அருகில் உள்ள 50 அடி உயர தண்ணீர் தொட்டியின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை தடுக்க முயன்ற போதும் முடியவில்லை. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பிய 4 பெண்கள் மீதும் உயிரிழந்த பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். அனைவரும் வீட்டில் இருந்தபோதுதான் அந்த இளைஞர் வீட்டிற்கு வந்து சென்றதாகவும், ஆனால் அதனை திரித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை அந்த பெண்கள் பரப்பிய காலையில் தனது மகள் உயிரிழந்து விட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE