ஒடிசாவில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிக்கையாளர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வருவதாக பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன் பேரில், அமலாக்கபிரிவு போலீஸார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் நேற்று ஈடுபட்டனர்.
அப்போது ஒடிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்து தன்பாத் விரைவு ரயிலில் இருந்து இறங்கிய இளம்பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸார் பிடித்து அவரது உடமைகளைச் சோதனை செய்தனர். அப்போது பண்டல், பண்டலாக அவரிடம் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது .
இதனையடுத்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இளம்பெண்ணை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிகா தாஸ்(25) என்பது தெரிய வந்தது. அவர் ஒடிசாவில் உள்ள பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவரிடம் பத்திரிகையாளர் என்பது தொடர்பான எந்த அடையாள அட்டையும் இல்லாததால் போலீஸார் உண்மையில் அவர் பத்திரிகையில் பணியாற்றி வருகிறாரா, சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக கஞ்சா கடத்தி வந்தார் என்பது குறித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரயில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த வழக்கில் கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும். பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!
தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!
வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?