ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே மாமி யாரை அடித்துக்கொலை செய்த மருமகனை காவல் துறையினர் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அச்ச மங்கலம் பட்டாளம்மன் கோயில் வட்டத்தைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி காஞ்சனா(57). இவர்களின் மகள் வரலட்சுமி (27).
இவர், அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் குமரேசன் (32) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு, குமரேசன் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுப்பழக்கத் துக்கு அடிமையான குமரேசன் தினசரி மது அருந்திவிட்டு தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இதனை வரலட்சுமியும், காஞ்சனா வும் கண்டித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்த குமரேசனை, அவரது மனைவி வரலட்சுமி கண்டித்துள்ளார். இத னால், அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, அங்கு வந்த காஞ்சனா தனது மருமகனை கண்டித்தார். இத னால், ஆத்திரமடைந்த குமரேசன் வீட்டின் அருகேயிருந்த மண் வெட்டி எடுத்து வந்து மாமியார் காஞ்சனாவை சரமாரியாக தாக்கினார்.
» ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள் 5 பேர் கைது - பின்னணி என்ன?
» தஞ்சை பாலியல் வழக்கில் 6 பேருக்கும் ஜாமீன் வழங்க பாதிக்கப்பட்ட இளம்பெண் எதிர்ப்பு
இதில், படுகாயமடைந்த காஞ் சனா மயங்கி கீழே விழுந்தார். உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் காஞ்சனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, குமரேசனை கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.