வேலூர்: வேலூர் சத்துவாச்சாரியில் தங்கராஜ் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள் 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பிரபல மருத்துவர் வீட்டில் இருந்து ரூ.10 கோடி பணத்தை தங்கராஜ் எடுத்துச் சென்ற தகவலால் அவரை மிரட்டி ரூ.1 கோடி கேட்டது காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வேலூர் சத்துவாச்சாரி அடுத்த வள்ளலார் சுதந்திர பொன் விழா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர், பழைய கட்டிடங்களை இடிக்கும் தொழில் செய்து வந்தார். தங்கராஜ், கடந்த 19-ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் அருகில் உள்ள முனீஸ்வரன் கோயில் அருகே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இதற்கிடையில், ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள் ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய தால்தான் தங்கராஜ் தற்கொலை செய்துகொண்டார் என அவரது உறவினர்கள் கடந்த 20-ம் தேதி சத்துவாச்சாரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து 2 தனிப்படை அமைத்து குற்ற வாளிகளை கைது செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டது.
தொடர் நடவடிக்கையாக வழக்கில் ரவுடி வசூர் ராஜாவின் மைத்துனர் விக்ரம் மற்றும் கூட்டாளிகளான நரேஷ், அருண்குமார், இம்தியாஸ், திலீப் ஆகிய 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். யோகேஷ் என்பவரை தேடி வருகின்றனர். ரவுடி வசூர் ராஜா, கோவை மத்திய சிறையில் இருப்பதால் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத் துள்ளனர்.
» பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை | சர்ச்சையைக் கிளப்பிய இயக்குநர் மோகன்.ஜி கைது?!
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் சத்துவாச் சாரியில் உள்ள பிரபல கருத் தரிப்பு மைய மருத்துவரின் பழைய வீட்டை தங்கராஜ் கடந்த ஓராண்டுக்கு முன்பு இடித்து அகற்றி கொடுத்துள்ளார். அப் போது, அந்த வீட்டில் இருந்த ரூ.10 கோடி பணத்தை ஒரு கும்பல் எடுத்துச்சென்றவிட்ட தகவல் பரவியது. இதை சத்துவாச்சாரி காவல் துறையினர் ஏற்கெனவே மருத்துவரிடம் விசாரித்து பொய் தகவல் என உறுதி செய்தனர்.
ஆனால், அந்த பணத்தை தங்க ராஜ்தான் எடுத்துச் சென்றுள்ளார் என்ற தகவல் ரவுடி வசூர் ராஜா கும்பலுக்கு தெரியவந்துள்ளது. சமீபத்தில் அவர் கழுத்தில் தங்கச் சங்கிலி, கை விரலில் மோதிரங்கள் அணிந்திருப்பதுடன் வீட்டின் மாடியில் புதிய வீடு கட்டியுள்ளார் என்றும், தங்கராஜின் மைத்துனர் சரவணன் என்பவர் இரண்டு கார் களை வைத்து வாடகை தொழில் செய்கிறார் என்றும் உறுதி செய்து கொண்டனர். மருத்துவர் வீட்டில் எடுத்த பணத்தை இப்போது செலவு செய்ய ஆரம்பித்துள்ளார் என கருதியுள்ளனர்.
எனவே, தங்கராஜ்தான் பணத்தை எடுத்திருப்பார் என இந்த வழக்கில் கைதாகியுள்ள திலீப் என்பவர் ரவுடி வசூர் ராஜா கும்பலிடம் உறுதியாக கூறியுள்ளார். அவர்தான் சில மாதங்களுக்கு முன்பு வரை அந்த பிரபல மருத்துவரிடம் ஓட்டுநராக பணியாற்றி வேலையில் இருந்து நின்றுள்ளார்.
இதையடுத்து, வழக்கு விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்துக்கு வந்த ரவுடி வசூர் ராஜாவிடம், தங்கராஜிடம் பணம் புழங்கும் தகவலை விக்ரம் கூறியுள்ளார். அதற்கு, வசூர் ராஜாவும் ‘சரி ஆளை தூக்கி ரூ.1 கோடி கேளுங்க, எனக்கும் வழக்கு செலவுக்கு பணம் தேவைப் படுகிறது’ என கூறியுள்ளார்.
அதன் பிறகே கடந்த 19-ம் தேதி தங்கராஜை வீடு இடிப்ப தற்காக வரவழைத்த விக்ரம் உள்ளிட்டோர், ரூ.1 கோடி கேட்டு அடித்து உதைத்து மிரட்டியுள் ளனர். பின்னர், நடந்த பேச்சு வார்த்தையில் ‘மருத்துவர் வீட்டில் இருந்து நான் பணம் எதுவும் எடுக்கவில்லை’ என தங்கராஜ் கூறியுள்ளார். அதை நம்பாத அந்த கும்பல் மீண்டும் மிரட்ட ஆரம் பித்தனர். ‘வேண்டுமென்றால் என்னிடம் உள்ள ரூ.15 லட்சம் பணத்தை கொடுக்கிறேன்’ என தங்கராஜ் கூறியுள்ளார்.
‘அந்த பணம் எல்லாம் எங்களுக்கு வேண்டாம், மருத்துவர் வீட்டில் எடுத்த பணத்தில் ரூ.30 லட்சத்தை இப்போதைக்கு கொடுக்க வேண்டும். இல்லா விட்டால் குடும்பத்தோடு காலி செய்து விடுவேன்’ என மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, தங்கராஜ் அணிந் திருந்த ஒன்றரை பவுன் தங்க நகை களை பறித்துக்கொண்டு அனுப்பி யுள்ளனர். வீட்டுக்கு சென்ற அவர் தற்கொலை செய்துகொண்டார்’’ என தெரிவித்தனர்.