நண்டு பிடிப்பதற்காக குளத்தில் இறங்கிய 2 சிறுவர்கள்; தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

By KU BUREAU

மகாராஷ்டிரா: நாசிக்கில் நண்டு பிடிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாசிக் நகரில் அம்பாட்-சாத்பூர் இணைப்புச் சாலையில் அமைந்துள்ள சஞ்சீவநகரில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 8 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள், தங்களின் மற்றொரு நண்பருடன் வீட்டிற்கு அருகிலுள்ள பண்ணையில் அமைந்துள்ள குளத்திற்குச் சென்றனர்.

அப்போது இவர்கள் 3 பேரும் குளத்தில் இறங்கி நண்டுகளைப் பிடிக்க முயன்றபோது, ​​8 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்கள் குளத்தில் தவறி விழுந்தனர். நீரின் ஆழம் தெரியாததால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினர். அவர்கள் நீரில் மூழ்கியதை பார்த்த மற்றொரு சிறுவன் விரைந்து சென்று பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவல் கிடைத்ததும் சிறுவர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.

அதன்பின்னர், போலீஸார் மற்றும் தீயணைப்பு படையினர் நீண்ட முயற்சிக்குப் அவர்களின் உடலை மீட்டனர். ஆனால் இரண்டு சிறுவர்களும் அதற்குள் உயிரிழந்துவிட்டனர் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அம்பாட் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE