வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை... கடிதம் எழுதி வைத்து விட்டு மகளுடன் தம்பதியர் தற்கொலை!

By காமதேனு

வருவாய்த் துறையினரைக் கண்டித்து வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் கூறி நெசவாளர் ஒருவர் ரயிலில் பாய்ந்தும், அவரது மனைவி, மகள் தூக்கிலிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடப்பா

ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் (கடப்பா) மாவட்டத்தில் வொண்டிமிட்டா மண்டலம் கொத்த மாதவரத்தைச் சேர்ந்தவர் சுப்பாராவ்(47). இவரது மனைவி பத்மாவதி(41), மகள் வினய்(17). நெசவாளரான சுப்பாராவுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது.

இந்நிலையில், அந்த நிலத்தை விற்க சுப்பாராவ் முயற்சி செய்துள்ளார். அப்போது வருவாய்த்துறை அதிகாரிகளால் தனது நிலப்பதிவேட்டில் குளறுபடி செய்யப்பட்டதை சுப்பாராவ் அறிந்தார். இதனால் தனது மூன்று ஏக்கர் நிலத்தை விற்க முடியாமல் சுப்பாராவ் தவித்து வந்தார்.

இந்த நிலையில், சுப்பாராவ் தனது மனைவி, மகளோடு தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார். இன்று காலை, கொத்த மாதவரத்தில் ரயிலில் பாய்ந்து சுப்பாராவ் தற்கொலை செய்து கொண்டார். அதே நேரத்தில் வீட்டில் பத்மாவதி, வினய் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சுப்பாராவ் மற்றும் அவரது மனைவி, மகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸார் வீட்டில் சோதனையிட்ட போது, சுப்பாராவ் எழுதிய கடிதம் கிடைத்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் தங்களை ஏமாற்றி விட்தால், தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று சுப்பாராவ் கடிதத்தில் எழுதியிருந்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும், மூன்று உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

தஞ்சையில் வீதி, வீதியாக நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு... ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

ராமேஸ்வரத்தில் மீனவர்களின் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது!

சரோஜாதேவி கால்ஷீட்டுக்கு காத்திருந்த எம்.ஜி.ஆர்!

10வது வேட்பாளரையும் அறிவித்தது பாமக... காஞ்சிபுரத்தில் களமிறங்குகிறார் ஜோதி வெங்கடேசன்!

அதிமுக வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட திடீர் உத்தரவு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE