பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் நள்ளிரவில் மர்மக்கும்பலால் 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு நியூ டிம்பர் லே அவுட்டைச் சேர்ந்தவர் அருண்(24). இவருக்கு ஜனவரி மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. ஆட்டோ டிரைவரான அருணை நேற்று நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 20-க்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அருண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பழிக்குப் பழியா?
இதையறிந்த படைராயனபுரா போலீஸார் வழக்குப் பதிவு செய்து அருண் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த 2021-ம் ஆண்டு ஒரு தாக்குதல் வழக்கில் அருண் கைது செய்யப்பட்டிருந்தார். அதற்குப் பழிக்குப் பழியாக அருண் கொலை செய்யப்பட்டாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பாபர் மசூதி இடிப்பு தினம்; டிசம்பர் 6... கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு!
எல்லை தாண்டிய காதல்; பாகிஸ்தான் காதலியின் கரம் பிடித்து அழைத்து வந்த இந்திய காதலன்!
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
ரூ.5060 கோடி உடனே தேவை! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
3 மணி நேரம் வெளுத்து வாங்கப்போகிறது மழை! சென்னைக்கு அடுத்த அதிர்ச்சி