திருமணம் செய்யாவிட்டால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்வேன்: இளைஞரை மிரட்டிய பெண் கைது!

By கவிதா குமார்

திருமணம் செய்து கொள்ளாவிட்டால் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று இளைஞரை மிரட்டிய பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள நஞ்சன்கூடு பகுதியைச் சேர்ந்தவர் ஆசிபூர் ரஹ்மான். ஹிம்மாவு கிராமத்தில் வசித்து வந்த ஆசிபூர், ஒரு பெயின்ட் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆசிபூர் ரஹ்மானுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நசிம் பேகம்(31) என்ற பெண் பழக்கமாகியுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரும் பழகியுள்ளனர். பீகாரைச் சேர்ந்த நசிம் பேகத்திற்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது. இந்த நிலையில், அதை மீறி அவருக்கு ஆசிபூர் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஆசிபூர் ரஹ்மானை நேரில் பார்ப்பதற்காக பீகாரில் இருந்து நசிம் பேகம், நஞ்சன்கூடுக்கு நேற்று வந்தார். அவரைப் பார்த்தது ஆசிபூர் அதிர்ச்சியடைந்தார். ஏற்கெனவே திருமணமான விஷயத்தை நசிம் பேகம் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. அத்துடன் ஆசிபூர் ரஹ்மானை விட அவர் வயது மூத்தவர் என்பதால், திருமணம் செய்ய முடியாது என்று ஆசிபூர் ரஹ்மான் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திமடைந்த நசிம் பேகம், தான் தங்கியிருந்த ஓட்டல் கட்டிடத்தின் மீது ஏறினார். திருமணம் செய்து கொள்ளாவிட்டால், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று ஆசிபூர் ரஹ்மான் கூறியுள்ளார். ஆனால், ஆசிபூர் பேசிக்கொள்ளலாம், இறங்கி வாருங்கள் என்று நசிமை அழைத்துள்ளார். திருமணம் செய்து கொள்வேன் என்று உறுதியளித்தால் தான், கீழே இறங்குவேன் என்று நசிம் பேகம் பிடிவாதம் பிடித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நஞ்சன்கூடு டவுன் போலீஸார். சம்பவ இடத்துக்கு வந்து நசிம்பேகத்தை கைது செய்தனர்.இதுதொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நஞ்சன்கூடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

'குக் வித் கோமாளி' பாலா செய்த தரமான சம்பவம்... வைரலாகும் வீடியோ!

1 முதல் 9-ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித்துறை முடிவு!

விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம்... காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!

நீரை சேமிக்கும் புதுமையான டெக்னிக்... வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் ட்விட்டர் வீடியோ!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE