ரூ.20 லட்சம் லஞ்சப் பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி கைது...திண்டுக்கல்லில் பரபரப்பு!

By காமதேனு

திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் பணத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட நிலையில் அவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி விசாரணை நடத்தி வருகிறார்.

அங்கித் திவாரி

திண்டுக்கல்லில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் அமலாக்கத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து தருவதாக கூறி அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் கேட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரியை மாட்டிவிட திட்டமிட்ட மருத்துவர், இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் ரகசியமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை மத்திய அரசு சின்னம் பதித்த காரில் வந்து மருத்துவரிடம் இருந்து ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை பெற்று கொண்டு திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியிடம் திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!

பரபரப்பான டி20 கிரிக்கெட்... தொடரை கைப்பற்றுமா இந்தியா?

கனமழை: சென்னை முழுவதும் பூங்காக்களை மூட உத்தரவு!

இன்று முதல் நடைமுறைக்கு வந்தது... பத்திரப்பதிவு கட்டணத்தில் மாற்றம்!

அதிர்ச்சி... 10 டன் எடை கொண்ட செல்போன் டவர் மாயம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE