ஒடிசாவில் கனக லாரியின் மீது வேன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கியோஞ்சர் மாவட்டம் காடகன் பகுதியில் இன்று காலை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கனரக லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீஸாருக்கும், தீயணைப்புதுறையினருக்கும் ததகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் படுகாயமடைந்த 7 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த 8 பேரின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், விபத்தில் சிக்கிய வேனில் இருந்தவர்கள் 20 பேரும் இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் கோயிலுக்குச் சென்றதும் தெரியவந்தது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு!
பரபரப்பான டி20 கிரிக்கெட்... தொடரை கைப்பற்றுமா இந்தியா?
கனமழை: சென்னை முழுவதும் பூங்காக்களை மூட உத்தரவு!
இன்று முதல் நடைமுறைக்கு வந்தது... பத்திரப்பதிவு கட்டணத்தில் மாற்றம்!