காதலித்த பெண்ணை கிண்டல் செய்த வாலிபரை, அப்பெண்ணின் காதலர் கோடாரியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஹூப்ளியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹூப்ளியைச் சேர்ந்தவர் சாகர். இவர் காதலித்த பெண்ணை சுதிர் ஹுலகுரு(31) என்பவர் கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண், சாகரிடம் கூறியுள்ளார். இதனால் சுதிரை, சாகர் தேடி வந்தார். இந்த நிலையில், ஹீப்ளியில் உள்ள ஒரு தாபாவில் நேற்று இரவு சுதிர் இருந்துள்ளார்.
அங்கு சென்ற சாகர்,' என்னுடைய காதலியை எதற்கு கிண்டல் செய்தாய்?' என்று கேட்டார். இதனால் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் தாபாவிற்குள் அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் அவர்களை விலக்கி விட்டனர். இதனால் அங்கிருந்து இருவரும் வெளியே வந்தனர்.
அப்போது மறைத்து வைத்திருந்த கோடாரியால் சுதிரை தாபா வாசலில் சாகர் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சுதிர் ஹுலகுரு பரிதாபமாக உயிரிழந்தார். இதைப் பார்த்த சாகர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இக்கொலை குறித்த தகவல் அறிந்த ஹூப்ளி ஊரக காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதிர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் சாகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலியை கேலி செய்தவரை காதலன் கோடாலியால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஹூப்ளியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மும்பையில் நாளை இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்... முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்!
மக்களவையில் விவாதங்கள் மற்றும் கேள்விகள் கிளப்பியதில்... தமிழக எம்பிக்களின் ஸ்கோர்கார்டு இதுதான்!
குட் நியூஸ்... 60 நாட்களுக்கு முன்பே அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம்!
மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் மோடி நடத்துகிறார்... ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு!
நடிகர் மன்சூர் அலிகான் தலைவர் பதவியில் இருந்து நீக்கம்... இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி அறிவிப்பு!