ரூ.25 கோடி மதிப்பிலான கொகைன்: உடலில் காப்ஸ்யூல்களாக கடத்திய நைஜீரியர்

By KU BUREAU

புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 25 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்றதாக நைஜீரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு செப்டம்பர் 7ம் தேதி துபாயில் இருந்து வந்தபோது சந்தேகத்திற்கிடமான நைஜீரியர் கைது செய்யபட்டார். சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், அவரது உடலில் அதிகமான காப்ஸ்யூல்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதன்பின்னர் அவற்றை அகற்றுவதற்கான மருத்துவ நடைமுறைகளை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் அவர் 28 ஓவல் வடிவ காப்ஸ்யூல்களை தானாக முன்வந்து வெளியேற்றினார்.

இதனையடுத்து மருத்துவ நடைமுறைகளுக்காக அந்த நைஜீரியர் சஃப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மருத்துவமனையில் தங்கியிருந்த போது, ​​மேலும் 56 காப்ஸ்யூல்களை வெளியேற்றினார்

இந்த காப்ஸ்யூல்களை வெட்டி திறந்து பார்த்தபோது, ​​அதில் 1,660 கிராம் எடையுள்ள கோகைன் எனும் போதைப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த கோகைனின் மதிப்பு ₹ 24.90 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், நைஜீரியர் கைது செய்யப்பட்டதாகவும் அந்த சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE