பயங்கரம்... பள்ளத்தாக்கில் கார் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

By காமதேனு

ஜம்மு காஷ்மீரில் கார் சாலையை விட்டு பள்ளத்தாக்கில் பாய்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று ஐந்து பேர் காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் பயணிம் செய்த கார் பந்தர்கோட் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தாக்கு பகுதியில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயத்துடன் மீட்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அது தற்போது அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், உயிரிழந்தவர் சுகாதாரத்துறையில் பணியாற்றியவர். அவருடன் அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.காயமடைந்த இன்னொரு குழந்தை அபாயக் கட்டத்தை தாண்டியுள்ளது என்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் இரங்கல் தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும். செனாப் பள்ளத்தாக்கில் அதிகரித்து வரும் விபத்துகள் ஆபத்தானவை. எனவே, அரசாங்கத்தின் தலையீடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம் என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE