திருமண ஊர்வலத்தில் தகராறு... அண்ணன் - தம்பி குத்திக்கொலை; குற்றவாளிகளைச் சுட்டுப்பிடித்த போலீஸ்!

By காமதேனு

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் இருவர் கத்திக் குத்துப்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக திருமணத்துக்கு வந்த விருந்தினர்கள் 6 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கத்திக்குத்தில் உயிரிழந்த அஜய் பிரஜாபதி, அங்கித்.

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டம், கேட்டசாராய் பகுதியில் நேற்று இரவு திருமண ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. இரவு 11 மணி அளவில் அஜய் பிரஜாபதி (23), அவரது சகோதரர் அங்கித் (20) ஆகிய இருவரும் திருமண ஊர்வலத்தில் இருந்து விலகி, மது அருந்த ஓடினர். இதனால் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கும், இரு சகோதரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதில், விருந்தினர்கள் 6 பேர் சேர்ந்து அஜய் பிரஜாபதி, அங்கித் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து இருவரது சடலமும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கத்திக்குத்து

இந்தச் சம்பவம் தொடர்பாக ஷாகஞ்ச் சர்க்கிள் போலீஸார், வழக்குப்பதிவு செய்து, உடனடியாக கத்திக்குத்து சம்பவத்தில் தொடர்புடையவர்களைக் கைது செய்தனர். குற்றவாளிகளைப் பிடிக்கும் போது அவர்கள் தாக்குதல் நடத்தியதால் போலீஸார், பதிலுக்குத் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில், குற்றவாளிகளான முகேஷ் பிந்த், நிஷு பிந்த், சதீஷ் பிந்த் ஆகிய மூவருக்கும் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஷாகஞ்ச் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


சென்னையில் பரபரப்பு... கத்தை, கத்தையாக சிக்கிய ரூ.1.25 கோடி ஹவாலா பணம்:

ஈபிஎஸ் மீது ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பெங்களூருவைக் கலக்கிய குழந்தைக் கடத்தும் கும்பல்: தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் கைது!

த்ரிஷாவிடம் 'மரணித்து விடு' என்று தான் சொன்னேன்: மன்சூர் அலிகானின் புது சர்ச்சை!

மின்சாரம் தாக்கி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் பலி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE