நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் மீது குவியும் புகார்கள்

By KU BUREAU

சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஏற்பாடு செய்த சிறப்பு முகாமில் தேவநாதன் யாதவ் மீது புகார்கள் குவிந்து வருகின்றன.

சென்னை மயிலாப்பூர் ‘தி மயிலாப்பூர் இந்து பர்மனென்ட் ஃபண்ட் லிமிடெட்’ என்ற நிதி நிறுவனத்தில் ரூ.24.5 கோடி மோசடி நடந்ததாக, பாதிக்கப் பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் நிதி நிறுவனத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன், மகிமைநாதன் ஆகிய 3 பேரையும் கடந்த மாதம் போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த வாடிக்கையாளர்களின் புகார்களை நேரடியாக பெரும் வகையில் மயிலாப்பூரில் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

நிதி நிறுவனத்தில் பொதுமக்கள் பணம் கட்டிய ஆவணங்கள், ரசீது உள்ளிட்டவற்றின் நகலை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரிடம் கடந்த 2 நாட்களாக அளித்து வருகின்றனர். தற்போது வரை 3,814 புகார்கள் வந்துள்ளன. அந்த நிறுவனத்தில் ரூ.24.5 கோடி மோசடி என வழக்கு பதியப் பட்டுள்ள நிலையில், இதுவரை ரூ.300 கோடி அளவுக்கு தேவநாதன் யாதவ் மோசடி செய்ததாக புகார் வந்துள்ளது” என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE