கரூரில் அதிர்ச்சி! சக மாணவரின் கழுத்தை அறுத்த மாணவர் கைது

By காமதேனு

கரூரில் கல்லூரி வேனில் வைத்து சக மாணவரை மாணவர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த நித்தீஷ்குமார் என்பவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே புலியூரில் இருக்கும் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். தினம்தோறும் முசிறியில் இருந்து கல்லூரி பேருந்தில் பயணித்து வந்துள்ளார். அதே கல்லூரியில் திருச்சி மாவட்டம் தொட்டியத்தைச் சேர்ந்த எம்பிஏ முதலாம் ஆண்டு மாணவன் அண்ணாமலை என்பவரும் உடன் பயணித்து வந்துள்ளார்.

கத்தியால் கழுத்தில் அறுக்கப்பட்ட மாணவர் நித்தீஷ்குமார்

கடந்த சில நாட்களாக இருவரும் பேசிக் கொள்ளாமல் கல்லூரி வேனில் பயணித்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அண்ணாமலை, நித்தீஷ் குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கும் நித்தீஷ்குமார் பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலை, தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் நித்தீஷ் குமாரின் கழுத்தை அறுத்துள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர் அண்ணாமலை

அவரது அலறல் சத்தம் கேட்டு வேனில் பயணித்த சக மாணவர்கள் கூச்சலிட்டதால், வேன் ஓட்டுநர் உடனடியாக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு நித்தீஷ்குமாரை அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு நித்தீஷ்குமார் அழைத்து செல்லப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸார், மாணவர் அண்ணாமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: 4 இந்தியர்கள் உள்பட 13 பேர் மாயம்!

'நீங்கள் வாங்கும் சம்பளம் யார் போட்ட பிச்சை'? திமுக அமைச்சர்களுக்கு ஆளுநர் கேள்வி!

பதற வைத்த பை... கொலை செய்யப்பட்ட இளம்பெண் உடல் மீட்பு!

சோகம்... குஜராத்தில் மின்னல் தாக்கி 20 பேர் பலி!

வந்தே பாரத் ரயில் மீது சரமாரி கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பயணிகள் அதிர்ச்சி!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE