13 ஆண்டாக நீதி கேட்டு போராடும் முன்னாள் ராணுவ வீரர் - தென்மண்டல ஐஜியிடம்  புகார்

By என்.சன்னாசி

தேனி: தேனி மாவட்டம் மயிலாடும்பாறையை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் தெய்வம். இவர் மதுரையிலுள்ள தென்மண்டல காவல்துறை ஐஜி பிரேம் ஆனந்த சின்காவிடம் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது; "கடந்த 2012 ஏப்ரல் 22ல் குடும்ப பிரச்சனை காரணமாக மயிலாடும்பாறை காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றபோது, புகாரை வாங்க மறுத்த காவல் துறையினர் தன்னை தாக்கினர். இது தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியும் இதுவரையிலும், எனக்கு நீதி கிடைக்கவில்லை. தொடர்ந்து எனக்கு எதிராக தேனி மாவட்ட காவல்துறையினர் செயல்படுகின்றனர். 13 ஆண்டாக நீதி கேட்டு போராடுகிறேன்.

ராணுவத்தில் பணிபுரிந்தவன் என்ற முறையிலும் நீதி கிடைக்கவில்லை. இந்திய ராணுவம், தமிழ்நாடு தகவல் ஆணையம், முதல்வரின் தனிப் பிரிவு, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறையினர் உத்தரவு அளித்தும் மதிக்காமல் எதிரிகளுக்கு ஆதரவாக தேனி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த 16 பேர் செயல்படுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். இப்புகார் மூலம் நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் ரானுவ வீரர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE