கரூர்: கரூரில் 22 ஏக்கர் நில மோசடி புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸாரும், வாங்கல் போலீஸாரும் அடுத்தடுத்து கைது செய்தனர். பின்னர், அவர் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீஸார் செப்.2-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், வாங்கல் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்து, திருச்சி மத்திய சிறையில் இருந்த சேகரை கைது செய்து அழைத்து வந்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் நேற்று ஆஜர்படுத்தினர். அவரை செப்.25 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.