மேடவாக்கம்: கோயில் பூட்டுகளை உடைத்து அம்மன் தாலி, நகை, உண்டியல் பணம் கொள்ளை

By பெ.ஜேம்ஸ் குமார்

மேடவாக்கம்: மேடவாக்கம் அடுத்த ஜல்லடையான் பேட்டை ரைஸ் மில் சாலையில் வீரத்தம்மன் கோயில் உள்ளது.

நேற்று இரவு இக்கோயில் பூசாரி முருகன், வழக்கம் போல் பூஜைகளை முடித்து விட்டு, கோயில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை வழக்கம் போல கோயிலை திறக்க வந்த போது, கோயில் கதவில் இருந்த மூன்று பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. கோயிலின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் மஞ்சள் கயிற்றில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்கத் தாலி மற்றும் உருப்படிகள் சுமார் 4.5 பவுன் மற்றும் மூக்குத்தி கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. கோயிலின் உள்ளே பீரோவில் வைத்திருந்த உண்டியல் சாவியை எடுத்து உண்டியலை திறந்து அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகி தினேஷ் குமார் (49) புகாரளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய போலீஸார், கோயில் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE