திருச்சியில் அதிர்ச்சி - 500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி பிச்சை எடுத்த பெண்கள்.!

By காமதேனு

சென்னை போன்ற பெருநகரங்களில் தொடங்கி, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் மக்கள் கூடும் இடங்களில் பெண்கள் சிலர் கையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்பதை வாடிக்கையாக வைத்துக்கொண்டுள்ளனர். அதிலும் எந்த ஊரில் திருவிழா நடந்தாலும், அந்த ஊர்களில் இவர்களும் இருப்பார்கள்.

ஆடி அமாவசையான இன்று திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டம் மற்றும் காவிரிக்கரையில் பலர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தனர். இதனை பயன்படுத்தி காசு பார்க்க 70 க்கும் மேற்பட்ட பெண்கள், கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை எடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போது 500 ரூபாய்க்கு குழந்தைகளை வாடகைக்கு வாங்கி அந்த பெண்கள் பிச்சை எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் பகுதியில் இதேபோல், குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சையெடுத்த பெண்களை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE